லிம்பேர்க் முருகன் ஆலயம் வருடாந்த மஹோற்சவம்-2021ரதோற்சவம் 04-07-2021

லிம்பேர்க் முருகன் ஆலயம் வருடாந்த மஹோற்சவம்-2021ரதோற்சவம் 04-07-2021

லிம்பேர்க் முருகன் ஆலய தேர்பவனியில் நிகழ்ந்த அதிசயம் .

லிம்பேர்க் மாநகரில் முருகன் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவதில் தேர் திருவிழா பெருவிழாவாக மாபெரும் விழாவாக நிகழ்ந்து நிறைவேறியது .நெதர்லாந்து நாட்டின் நெய்தல் நிலத்தினிலே உயர்ந்த இடத்தினிலே நான்கு புறங்களும் பார்க்கதக்க வகையில் சிறப்பான கலை கலாசார அமைப்பில் இக்கோவில் சிறந்து விளங்குகின்றது .04-07-2021 அன்று இடம்பெற்ற தேர்த்திருவிழா உற்சவத்தில் மிகவும் ஒரு திருப்புமுனையான சிறப்பான அம்சம் இங்கே நிகழ்ந்து நிறைவு கண்டிருக்கின்றது என்பது கோடிட்டு காட்டவேண்டிய விடயமாக இருக்கின்றது.

பஞ்சபூதங்களுக்கும் இறைவனுக்கும் எவ்வாறு தொடர்பு இருக்கின்றது என்பதனை விளக்கும் முகமாகவே இந்நிகழ்வு நிகழ்ந்திருகின்றது என்பதுதான்.அதாவது முருகப்பெருமான் அங்கே அகோர முகத்துடன் அழித்தல் தொழிலை புரிவதற்காக மேளதாளங்களுடன் நாதஸ்வர இசையுடன் ஆடி ஆடி அங்கே வேல்கொண்டு வினைதீர்க்கும் வெற்றிதரும் நாயகனாய் தேர்பவனியினிலே அமர்ந்த வேளையில்தான் இந்நிகழ்வு நிகழ்ந்துள்ளது.முருகப்பெருமான் ஆடி அசைந்து வீதியிலே பவனிவந்து அங்கே ஏறுகின்றபொழுது கடும்மழையுடன் பஞ்சபூதங்கள் ஒன்றிணைந்து வானம் சொர்கவாசல் திறக்க வர்ணபகவான் நீராபிசேகம் செய்து பூஜித்தது கண்கொள்ளாக்காட்சியாக அமைந்தது .

பெரும் இடி மழையுடன் காற்றுடன்கூடிய மழை கொட்ட பூமிக்கும் நிலத்திற்கும் ஆன்மாக்களை குளிரவைக்கவும் முருகபெருமானின் திருவருள் கிட்ட சிறுவர் முதல் முதியவர்கள்  வரை  தடம் பிடித்து லிம்பேர்க் முருகனுக்கு அரோகரா என்ற சப்தம் முழங்க முருகன் தேர் பவனி வந்ததை காணக்கூடியதாக இருந்தது .இதுதான் பஞ்சபூதங்களுக்கும் இறைவனுக்கும் உள்ள தொடர்பு .

 

கடந்த வருடம் உலகம் பூராகவும் கொடிய நுண்கிருமியின் தாக்கத்தால் உலகம் முடங்கி இருந்தது .லிம்பேர்க் முருகன் ஆலயத்திலும் சென்ற ஆண்டு தேர்பவனி இடம்பெறவில்லை .லிம்பேர்க் முருகனின் தேர்பவனிக்கு காத்திருந்த பஞ்சபூதங்கள் இந்த ஆண்டு முருகன் தேர்பவனிக்கு வெளிவந்ததும் நீர்மழை பொழிந்து அதுவும் ice மழை பொழிந்து முருகப்பெருமானை குளிரவைத்து சம்பவம் நிகழ்ந்து நிறைவேறியிருக்கின்றது .அதுமட்டுமல்ல ஆன்மாக்கள் மிகவும் கண்மலர்வோடு ,கருணையோடு சந்தோசத்துடன் மகிழ்வுடன் அரோகரா ஆரவாரம் செய்து தேர்பவனியை நிறைவு செய்திருகிறார்கள் .