prabo ganabathi|பிரபோ கணபதி

prabo ganabathi|பிரபோ கணபதி

ப்ரபோ கணபதே பரிபூரண வாழ்வருள்வாயே! ப்ரபோ கணபதே ! கணபதே! கணபதே! சார்ந்து வணங்கி துதி பாடி ஆடி உந்தன் சன்னதி சரணடைந்தோமே சாந்த சித்த சவுபாக்கியங்கள் யாவையும் தந்தருள் சத்குரு நீயே ப்ரபோ கணபதே பரிபூரண வாழ்வருள்வாயே தேடித் தேடி எங்கோ ஓடுகின்றார் உன்னை தேடிக் கண்டு கொள்ளலாமே!!! உன்னை தேடிக்கண்டு கொள்ளலாமே கோடி கோடி மதயானைகள் பணி செய்ய குன்றென விளங்கும் பெம்மானே!!! ப்ரபோ கணபதே பரிபூரண வாழ்வருள்வாயே ! ப்ரபோ கணபதே! கணபதே! கணபதே! ஆதி மூல கணநாத கஜானன ஆதி மூல கணநாத கஜானன அற்புத தவள ஸ்வரூப தேவதேவ ஜெய விஜய விநாயக ! சின்மய பரசிவ தீபா! ப்ரபோ கணபதே பரிபூரண வாழ்வருள்வாயே ! ப்ரபோ கணபதே கணபதே கணபதே!!!