துன்பங்களிலிருந்து காக்கும் பைரவர் கவச மந்திரம். bairavar kavasam
மனித சக்திக்கு அப்பாற்பட்டது தெய்வீக சக்தி என்பது அனைவரும் அறிந்ததே. தெய்வீக சக்தி நிறைந்திருக்கும் இதே உலகில் துஷ்ட சக்திகளும் இருக்கின்றன. இந்த துஷ்ட சக்திகளை தீய மாந்த்ரீக கலை மூலம் ஒரு சிலர் தங்களுக்கு ஆகாதவர்களுக்கு செய்வினை போன்றவற்றை செய்கின்றனர். ஒரு சிலருக்கு எதிர்பாராத விதமான விபத்துகளும் ஏற்படுகிறது. இவையனைத்திலிருந்தும் காக்கும் மிகுந்த ஆற்றல் வாய்ந்த ஒரு “பைரவர் கவச மந்திரம்” தான் இது. காக்கும் கடவுளான பைரவரை வழிபடுவதற்கான மிகவும் சக்தி வாய்ந்த கவசம் இது. இந்த கவசத்தை தினமும் நீங்கள் கேட்டாலே செய்வினை மாந்திரீகம், துஷ்ட சக்திகள் பாதிப்புகள் உங்களுக்கு ஏற்பட்டிருந்தால் அது நீங்கும். வாகனங்களில் பயணிக்கும் போது எதிர்பாரா விதத்தில் ஏற்படும் ஆபத்து நீங்கும்.